உங்கள் விளம்பரம் இங்கே வர தொடர்பு கொள்ளுங்கள்

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, November 28, 2017

சுவையான சாம்பார் பொடி செய்வது எப்படி? sambar powder(podi) recipe tamil

சுவையான சாம்பார் பொடி செய்வது எப்படி?.


பலருக்கு சாம்பார் பொடி மிக எளிதாக தயாரிப்பது எப்படி என்று தெரியாததால் கடையிலே வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தெரியவில்லை வீட்டில் தயாரித்தால் அதற்கான செலவு மிக குறைவாக இருக்கும் என்பதுதான்.

நான் சொல்லும் இந்த முறைப்படி தயாரித்து நீங்கள் பிஸினஸ் கூட செய்யலாம். நல்ல மார்க்கெட்டிங்க் செய்தால் நீங்கள் தயாரிக்கும் இந்த சாம்பார் பொடி மிக பிரபலமாக வாய்ப்புக்கள் மிக அதிகம்.


அதை எப்படி  நாம் தயாரிப்பது என்பதை இங்கே  பார்ப்போம்.... 


தேவையான பொருள்கள்:


கடலைப்பருப்பு - 100 கிராம்

துவரம் பருப்பு - 200 கிராம்

மிளகாய் வற்றல் - 1/2 கிலோ

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி விதை (தனியா) - 1 கிலோ

மிளகு - 40 கிராம்

சீரகம் - 40 கிராம்

வெந்தயம் - 10 கிராம்

பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப



செய்முறை:


மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சுத்தம் செய்து  வெயிலில் காயவைக்க வேண்டும். அதன் பின் அதனை மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து கொள்ளவும். வறுக்கும் போது கருகிவிடாமல் பார்த்து கொள்ளவும்.

 இப்படி வறுத்து வைத்த பொருட்களை மிக்ஸியில்  அரைத்து வைத்து ஒரு மணி நேரம் கழித்து கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதவாறு வைத்து  பல மாதங்கள் பயன்படுத்தலாம்

இந்த முறையில் செய்து பாருங்கள் சுவைத்து மகிழுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot