உங்கள் விளம்பரம் இங்கே வர தொடர்பு கொள்ளுங்கள்

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, November 28, 2017

02. சுவையான ரோட்டுகடை பஜ்ஜி செய்வது எப்படி?How to make bajji

02. சுவையான ரோட்டுகடை பஜ்ஜி செய்வது எப்படி?

பஜ்ஜி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது எனலாம். உடல்நிலை சரியில்லை என்றாலும் பஜ்ஜியை பார்த்துவிட்டால் நாக்கில் ஜலம் சொட்டிவிடும்...கடை பஜ்ஜிகள் சாப்பிட நன்றாக இருந்தாலும் இப்போதெல்லாம் அதை சாப்பிட்டால் வயிறு டேமேஜாகிவிடும் காரணம் அவர்கள் கண்ட கண்ட ஆயிலை பயன்படுத்துவதாலும் அதுமட்டுமல்லாமல் அதையே மீண்டும் மீண்டும் சுடுபடுத்தி பயன்படுத்துவதாலும் உடலுக்கு பல பிரச்சனைகள் உண்டாகின்றன. அதனை தடுக்க நாமே பஜ்ஜியை தயாரித்து சாப்பிடுவதுதான் சிறந்தது. பலரும் பஜ்ஜி சுட்டாலும் அது நன்றாக வருவதில்லை.

 சிறந்த டேஸ்டான பஜ்ஜி சுடுவதை  நான் இங்கே சொல்லி தருகிறேன்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு   2 கப்
அரிசி மாவு 1 கப்
பொரிகடலை 1 கப் (பொரிகடலையை மிக்ஸியில் போட்டு மிக நைஸாக அரைத்து கொள்ளவும்)
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
பெருங்காயம் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

பஜ்ஜிக்கு தேவையான ஏதாவது ஒரு காய் உருளைக்கிழங்கு/வாழைக்காய்/கத்தரிக்காய்/ஆலப்பினோ

ஆயில் பஜ்ஜி பொரித்து எடுக்க தேவையான அளவு


செய்முறை:
மேலே சொன்ன பொருட்களை எல்லாம் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும் (மிக தண்ணிராகிவிடக் கூடாது. கொஞ்சம் கெட்டியாக கரைத்து கொள்ளவும்)

இப்படி கரைத்த பஜ்ஜி மசாலாவில் உங்களுக்கு தேவையான காயை மிக மெல்லிதாக சீவி அதை இந்த பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து அதை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.

டிப்ஸ். இந்த மாவில் பெருஞ்சீரகம் சிறிதளவு போட்டு பிசைந்து சுடலாம் அல்லது இந்த மாவில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி மிக்ஸ் செய்த்து அதன் பின் சுடலமாம். மிக மிக சுவையாக இருக்கும்.


பஜ்ஜிக்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும் ஒரு வேளை சட்னி அரைக்க நேரமில்லை என்றால் தக்காளி சாஸ் வைத்து சாப்பிடலாம்.

பஜ்ஜி சாப்பிடுங்கள் மாலை நேரத்தை அப்படியே பஜ்ஜியோடு சேர்ந்து ரசியுங்கள்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot